Hot News
Home » செய்திகள் » கல்முனை வாழ் தமிழ் மக்களின் வேண்டுகோள் நிறைவேற்றித்தரப்படும்: `ரெலொ` கோடீஸ்வரன்

கல்முனை வாழ் தமிழ் மக்களின் வேண்டுகோள் நிறைவேற்றித்தரப்படும்: `ரெலொ` கோடீஸ்வரன்

கல்முனை பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏக வேண்டுகோள் நிறைவேற்றித்தரப்படும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தவிசாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் நிகழ்விற்கு விஷேட அதிதியாக வருகைதந்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை பிரதேசத்தில் பிரதேசவாழ் மக்கள் மிகவும் வேண்டிநிற்கின்ற, கடந்தகாலங்களில் செயற்பட்டிருக்கவேண்டிய, முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன. அந்த விடையத்தில் ஒட்டு மொத்தமாக கல்முனை பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏக வேண்டுகோளாக இருப்பது கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்ற வார்த்தையே. கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தப்பட வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஒரு சிறந்த பிரதேச செயலகமாக நிச்சயம் குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட மாதத்திற்குள் தரமுயர்த்தப்படுமென்ற அந்த நல்ல கருத்தினை இந்த இடத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். எங்களது நீண்டகால கோரிக்கையாக இருக்கின்ற கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தி கல்முனை பிரதேச வாழ் தமிழ் மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற்றித்தரப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் .

பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இரண்டு மில்லியன் ரூபாய் கார்மேல் பற்றிமா கல்லூரியின் மைதானத்தின் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதாக கருத்தினை பகிர்ந்துகொண்டார். இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author: TELO Media Team 1