Hot News
Home » செய்திகள் » அரச படைகளுக்கு ஆபத்தானவை என்பதால் மகிந்த போலிப்பிரசாரம்

அரச படைகளுக்கு ஆபத்தானவை என்பதால் மகிந்த போலிப்பிரசாரம்

இசைப்பிரியா மற்றும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான ஆதாரங்கள் அரச படைகளுக்கு ஆபத்தானவை என்பது, மகிந்தவின் தற்போதைய போலிப்பிரசாரத்தின் மூலம் உணரமுடிகிறது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இலங்கை அரசபடைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களில் குறிப்பாக ஊடகப்போராளி இசைப்பிரியா தொடர்பான ஆதாரம் மற்றும் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான ஆதாரமும் போலியானவை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஐபக்ஷ இந்தியப் பயணத்தில் இந்திய ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

உண்மையில் மகிந்த ஐனாதிபதியாக இருக்கும் போது தான் இக் குற்றச்சாட்டு ஆதாரங்கள் சனல் நான்கு ஊடகத்தால் வெளியிடப்பட்டதுடன் ஐ நா மனித உரிமை ஆணையகத்திடம் வழங்கப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இவை போலியானவை என்றால் ஆதாரங்களை தொழிநுட்ப பரிசோதனைகளுக்கு உள்ளாக்கி அதனை நியாயப்படுத்த விசாரணையை எதிர்நோக்கி இருக்கலாம். இதனை மகிந்த இன்று கூறுவது போல உண்மையான போலி என்றால் விட்டிருப்பாரா? இவர் குறிப்பிடும் ஆதாரங்கள் இலங்கை அரச படைகளுக்கு ஆபத்தானவை என்பது மகிந்தவின் தற்போதைய போலிப்பிரசாரத்தின் மூலம் உணரமுடிகிறது.

Author: TELO Media Team 1