Hot News
Home » செய்திகள் » 20 இற்கு ஐ.தே.க. கொள்கையளவில் ஆதரவு- ஜே.வி.பி.

20 இற்கு ஐ.தே.க. கொள்கையளவில் ஆதரவு- ஜே.வி.பி.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கொள்கையளவில் உடன்படுவதாக அக்கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்ரமசிங்க மக்கள் விடுதலை முன்னணியிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதனால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி விரைவில் இறுதித் தீர்மானமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் பிரதமர் ஜே.வி.பி.யிடம் கூறியுள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் கொண்டுவரவுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்து கட்சித் தலைவர்களுடன் ஜே.வி.பி. பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றது. இதன் ஒரு நடவடிக்கையாக நேற்று (22) பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் ஜே.வி.பி.யிற்கும் ஐ.தே.கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

இக்கலந்துரையாடலில், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத், அரசியல் சபை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரும், ஐ.தே.க. சார்பில் பிரதமருடன் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டனர்.