Hot News
Home » செய்திகள் » வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற சு.க வின் ஒத்துழைப்பு தேவையில்லை

வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற சு.க வின் ஒத்துழைப்பு தேவையில்லை

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு இல்லாமல் இம்முறை வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு முடிந்ததாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கந்தானை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு இல்லாமல் வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றி கொண்டதாகவும் எதிர்காலத்திலும் அவர்களின் உதவியில்லாமல் வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றி கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.