Hot News
Home » தற்போதைய செய்திகள் » பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும்

பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும்

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை உடனடியாக கைது செய்து விசாரணை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் குறித்து ஏற்கனவே அறிவித்தல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காதமைக்கே இவர்களைக் கைது செய்யுமாறு அவர் கோரியுள்ளார்.

இவ்வாறு நடவடிக்கை எடுக்காததனால் அப்பாவி மக்கள் 330 பேரின் உயிர்கள் இழக்கப்படுவதற்கும், 500 இற்கும் அதிகமானோர் காயமடைவதற்கும் காரணமாக அமைந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Author: TELO Media Team 1