Hot News
Home » செய்திகள் » `தவ்ஹீத்` அல்லாத பள்ளிவாசல்கள் தாக்கப்படலாம்

`தவ்ஹீத்` அல்லாத பள்ளிவாசல்கள் தாக்கப்படலாம்

இலங்கையில் நாளைய தினம் (26) தவ்ஹீத் மார்க்க வழிமுறையை பின்பற்றாத பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குப்பு பள்ளி மற்றும் அவுலியா மஸ்ஜித்துக்கள் மீதே சில அடிப்படைவாத (தவ்ஹீத்) அமைப்புக்கள் நாளைய தினம் தாக்குதல்களை நடத்தலாமென பாதுகாப்பு தரப்பினர் எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.

குறித்த பள்ளிவாசல்கள் உருவ வழிபாட்டினைக் கடைப்பிடிப்பதாக சொல்லப்படுகிற நிலையில் அதன் மீது அடிப்படைவாத அமைப்புக்கள் தாக்குதல் மேற்கொள்ளலாம் என நம்பப்படுகிறது.

பொலிஸ் மா அதிபருக்கு குற்றப் புலனாய்வுத் துறையினர் இதுதொடர்பான விசேட கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளனர்.

நாளைய தினம் இஸ்லாமியர்களின் ஜும்மாத் தொழுகைகள் நடைபெறவுள்ள நிலையில் முற்கூட்டிய பாதுகாப்பு ஏற்பாடாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Author: TELO Media Team 1