Hot News
Home » செய்திகள் » `சர்வதேச` பயங்கரவாதம் மட்டுமல்ல `உள்ளூர்` பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும்

`சர்வதேச` பயங்கரவாதம் மட்டுமல்ல `உள்ளூர்` பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும்

கிறிஸ்தவ தேவாலங்களை தாக்கும் `சர்வதேச`பயங்கரவாதம் மட்டுமல்ல மசூதிகளை தாக்கும் `உள்ளூர்` பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படை வாதத்தை நிராகரிக்கும் அதே கையோடு பவுத்த மேலாதிக்கத்தையும் நாம் எதிர்த்தாக வேண்டியுள்ளது.

கடந்த இரு நாட்களாக வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்களின் மசூதிகளுக்கும் வீடுகளுக்கும் வியாபாரஸ்தலங்களுக்கும் எதிரான நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டித்து
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் இன்று (14) வெளியிட்ட அறிக்கையில் மேற்குறித்தவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கெதிரான இனவாத தாக்குதல்களை `உள்நாட்டு` சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணும் துறைகள் நிறுத்தத் தவறிவிட்டதாக குற்றஞ்சாடிய அவர், தமிழினம் கோருவது போல், முஸ்லிம்களின் அரசியல்- சிவில் சமூகங்கள் `வெளிநாட்டு` உதவியைக் கோரும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முழு நாடும் இன்னமும் பீதியில் உறைந்துள்ள நிலையில், மக்கள் பீதியின்றி, அச்சமின்றி தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு துரித கதியில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென
மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.