Hot News
Home » செய்திகள் » வவுனியாவில்`ரெலோ` குகனின் 20வது நினைவேந்தல்

வவுனியாவில்`ரெலோ` குகனின் 20வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா முன்னாள் மாவட்ட பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமாக கிறிஸ்டி குகராஜா (குகன்) அவர்களின் 20வது நினைவு தினம் நேற்று (15) காலை வவுனியா வைரவப்புளிங்குளம் `யங் ஸ்ரார்` விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள அன்னாரின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன்  தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான செந்தில்நாதன் மயூரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபைத் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான து. நடராஜசிங்கம் (ரவி), ரெலோ சார்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் மெழுவர்த்தியும் ஏற்றினார்கள்.