Hot News
Home » செய்திகள் » முஸ்லிம்களைப் போல் சிங்களவர்களும் முன்வரவேண்டும்

முஸ்லிம்களைப் போல் சிங்களவர்களும் முன்வரவேண்டும்


முஸ்லிம்கள் ISIS ஐ காட்டிக்கொடுத்தது போன்று, சிங்களவர்களும் தமது இனத்திலுள்ள வன்முறையாளர்களை காட்டிக்கொடுக்க வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், குளியாபிட்டி – ஹெட்டிபொல அல் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் மக்களுடன் நேற்று கலந்துரையாடினார்.


ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இதன் போது தெரிவித்ததாவது,

பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற தீவிரவாதப் போக்குடையவர்களை வன்மையாகக் கண்டிப்பதுடன், எவ்வாறு முஸ்லிம்கள் ISIS-ஐ காட்டிக்கொடுத்தார்களோ அதே போல பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற மக்கள் இதற்கு சம்பந்தப்பட்டவர்களைக் காட்டிக் கொடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க உதவி செய்ய வேண்டும்.

இந்த கைதுகள் மூலம் இனிமேல் இந்நாட்டில் அனைத்து சமூகமும் இங்கு இருக்கும் பல்லின மக்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்ற ஒரு சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.