Hot News
Home » செய்திகள் » இலங்கைக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல் இந்தியாவுக்கு ஏற்படுவது போன்று

இலங்கைக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல் இந்தியாவுக்கு ஏற்படுவது போன்று

இலங்கைக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல் இந்தியாவுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தலுக்கு சமமானது என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் கூறியுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி 11 இந்தியர்கள் உட்பட பல அப்பாவி மக்களின் உயிர்களை பலியெடுத்த பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இந்தியா இலங்கையுடன் சேர்ந்து மிகவும் நெருக்கமாகவும் பலமாகவும் இணைந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

“நாம் உங்களுடன் சேர்ந்து ஜிஹாட் கருத்தியல் மற்றும் ஜிஹாட் பயங்கரவாதத்துக்கு எதிராக தோலோடு தோலாக போராடுவோம்” என்று இலங்கைக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதை உறுதி செய்து இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் கூறியுள்ளார்

Author: TELO Admin