Hot News
Home » செய்திகள் » திருமலையில் தமிழினப் படுகொலை நினைவு வார 5வது நாள் அஞ்சலி

திருமலையில் தமிழினப் படுகொலை நினைவு வார 5வது நாள் அஞ்சலி

பாராளுமன்றம் மற்றும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளருமான  எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலை நினைவு வார 5ஆவது நாளான நேற்று (16)) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன் போது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருமலை மாவட்ட அமைப்பாளர் உட்பட உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழினப் படுகொலை நினைவு வாரத்தில் 8 மாவட்டங்களில் 22 இடங்களில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்று வருகின்றது.

அதன் நிமிர்த்தம் தற்போது கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் முன்னெடுக்கப்படுகின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகள் இதற்கு முன்னர், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தாம் ஒரு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்த வாஜிலிங்கம்,  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக இலங்கை அரசாங்கம் நிறுத்தப்படவேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளை தாம் முன்னெடுத்துவருவதாக கூறியுள்ளார்.

மேலும், அம்பாறையின் திருக்கோவில் கடற்கரையில் இன்று காலை 11 மணிக்கும், மாலையில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையிலும் இந்நிகழ்வு நடைபெற்றன.

இறுதி 22ஆவது நிகழ்வாக முள்ளிவாய்க்காலில் நாளை காலை 10.30 மணிக்கு நினைகூரல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.