Hot News
Home » செய்திகள் » அரசியல் தீர்வில் தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய நிலைமை உருவாக வேண்டும்

அரசியல் தீர்வில் தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய நிலைமை உருவாக வேண்டும்

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலைகளில் பிரதான நிகழ்வாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூறுவதன் ஊடாகவே ஸ்ரீலங்கா அரசிற்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்த முடியும். தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய நிலைமை உருவாகும் வகையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என பாராளுமன்றம் மற்றும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளருமான  எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்காலிற்கு சமுகமளிக்க முடியாத மக்களை அவர்களின் பிரதேசங்களிலேயே இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களுக்காக நினைவேந்தல்களை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றம் மற்றும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளருமான  எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலை நினைவு வார 6ஆவது நாளான இன்றைய தினம் (17) அம்பாறையில் நினைவு கூறப்பட்டது

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அம்பாறை காரைதீவு கடற்கரை காளிகோவில் அருகில் இன்று மதியம் இந்த நினைவு தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் எஸ்.நேசராசா, ஆ.பூவாலரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு நினைவுச்சுடர் ஏற்றி அகவணக்கத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது உரையாற்றிய சிவாஜி தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளக் கூடிய நிலைமை உருவாகும் வகையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.