Hot News
Home » செய்திகள் » மட்டு நகரில் தமிழினப் படுகொலை நினைவு வார 6வது நாள் அஞ்சலி

மட்டு நகரில் தமிழினப் படுகொலை நினைவு வார 6வது நாள் அஞ்சலி

பாராளுமன்றம் மற்றும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளருமான  எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் தமிழினப் படுகொலை நினைவு வார 6ஆவது நாளான நேற்று (17) மாலை 5 மணியளவில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பாராளுமன்றம் மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளருமான  கோவிந்தன் ஜனா கருணகரம், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈழ மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணி­யின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) உப­த­லை­வர் இரா.துரை­ரட்­ணம், . தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மட்டு மாவட்ட அமைப்பாளர் உட்பட உறுப்பினர்கள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழினப் படுகொலை நினைவு வாரத்தில் 8 மாவட்டங்களில் 22 இடங்களில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.