Hot News
Home » செய்திகள் » முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் `ரெலோ` தலைவர்களுடன் உறுப்பினர்கள் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் `ரெலோ` தலைவர்களுடன் உறுப்பினர்கள் அஞ்சலி

தமிழினப் படுகொலை நினைவு வாரத்தின் இறுதிநாள் அனுஷ்டிப்புக்கள் முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று (12) காலை 10.30 மணியளவில் நடைபெற்றன.


இதன் போது, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்றம் மற்றும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளருமான  எம்.கே.சிவாஜிலிங்கம், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினருமான விந்தன் கனகரட்னம், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணிச் செயலாளருமான சபா குகதாஸ், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான ஆ.புவனேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட ரெலோ சார்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்றம் மற்றும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளருமான  எம்.கே.சிவாஜிலிங்கம்  ஏற்பாட்டில் மே 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தமிழினப் படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. முக்கிய படுகொலைகள் நடந்த இடங்களில் நாளாந்தம் நினைவஞ்சலி நடத்தப்படுவது வழக்கம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யோடு நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான உறவுகள் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் மண்ணில், தமிழினப் படுகொலையின் நினைவு வார இறுதி நிகழ்வுகள் இன்று காலை இடம் பெறுகிறது.

  • ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப் படைகளினால் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
  • தமிழ் இனப் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் (18.05.2019)
  • தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும்,
  • கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி விசாரணை செய்
  • தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்
  • ஆயுதப்படைகளே எமது காணிகளை விட்டு வெளியேறு
  • பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப்பெறு
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து
  • தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்து

உள்ளிட்ட கோரிக்கைகளோடு தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் மே 12 முதல் மே 18ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது.