Hot News
Home » செய்திகள் » ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும்

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும்

ஸ்ரீலங்காவில் முதலில் ஜனாதிபதித்தேர்தலே நடைபெறுமெனவும் ஏனைய தேர்தல்கள் அதன் பின்னரேயே நடை பெறும் எனவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 4 மாதத்துக்குள் மாகாண சபை தேர்தல் ஒன்று நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வது சாத்தியமில்லை என அரசா ங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உயிர்த் ஞாயழறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து முதலில் நடத்தும் தேர்தல் தொடர்பில் அரசியல்வாதிகளிடம் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர் தலை முதலில் நடத்துவது வரை வேறு தேர்தல்கள் நடத்துவதில்லை என்று இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதக தெரிவக்கப்படுகிறது.

இதேவேளை தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அண்மை யில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.