Hot News
Home » செய்திகள் » அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரிக்காது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரிக்காது

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹெவாஹெட்ட கிவுல்லிந்த பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று (21) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமல்ல, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வருகிறது. இதற்காக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, மக்கள் விடுதலை முன்னணிக்கு சிறப்பாக உதவியுள்ளார்.

அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கி்ய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, நிரோஷன் பெரேரா மட்டுமல்லாது அந்த கட்சியி்ன முக்கியஸ்தர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். றிசார்ட் பதியூதீன் பயங்கரவாதத்தை போஷித்து வருகிறார்.

றிசார்ட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அதன் முக்கிஸ்தர்கள் பகிரங்கமாக கூறியுள்ளனர் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.