Hot News
Home » செய்திகள் » கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்து வைத்தார் `ரெலோ` தலைவர்

கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்து வைத்தார் `ரெலோ` தலைவர்

வவுனியா, கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (Smart Classroom) திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ். பாலச்சந்திரன் தலைமையில் இன்று (13) நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கலந்து கொண்டு திறன் வகுப்பறையை திறந்து வைத்தார்.

நிகழ்வின் முன்னதாக விருந்தினர்கள் பாண்ட் வாத்தியம் முழங்க பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சகிதம் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

இந்நிகழ்வில் மாணவத் தலைவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் சின்னம் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.