Hot News
Home » செய்திகள் » பௌத்த பிக்குகளின் மேலாதிக்கம் அரசியலில் ஆபத்தானது

பௌத்த பிக்குகளின் மேலாதிக்கம் அரசியலில் ஆபத்தானது

சிறுபான்மையாக இருக்கும் மக்களை ஒடுக்கும் வகையில் செயற்படுவதற்கு பௌத்த பிக்குகளுக்கு அனுமதிக்க முடியாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளின் மேலாதிக்கம் ஓங்கும் வரை இடமளித்துவிட்டு, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் கூறியுள்ளார்.

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் நேற்று (13) காலை திறன் வகுப்பறை திறப்புவிழா நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் ச.பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் முதல் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வகுப்பறையை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் திறந்துவைத்தார்.

இதன்போது உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், முஸ்லிம் மக்களை அச்ச நிலைமைக்குள் தள்ளிவிட்டு, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக சாடியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட புத்த பிக்குகளும் இன்று ஆதரிக்கும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.