Hot News
Home » செய்திகள் » எந்தத் தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார்

எந்தத் தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார்

எதிர்காலத்தில் நடைபெறும் எந்தத் தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திபில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும். நாடாளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றும் யோசனை மூலமே நாடாளுமன்றத்தை நடத்த முடியும். நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம்.

19ஆவது திருத்தச் சட்டம் காரணமாகவே அமைச்சரவைக்கும், ஜனாதிபதிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதுடன் அமைச்சரவையை கூட்ட முடியாதுள்ளது.

சிந்திக்காமல் எம் மீது தாக்குதல் நடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் காரணமாக பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் மோதல் காணப்படுகிறது. இந்த மோதல் தொடர்ந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவர்களின் இரண்டு பேரின் சண்டையை மக்கள் மீது சுமத்த முடியாது.

நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது. இதனால், இவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என மக்கள் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியிடமும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.