Hot News
Home » செய்திகள் » `ரெலோ` செயலாளர் சிறிகாந்தா தலைமையில் தலைவர் அமிரின் 30வது நினைவேந்தல்

`ரெலோ` செயலாளர் சிறிகாந்தா தலைமையில் தலைவர் அமிரின் 30வது நினைவேந்தல்

இலங்கையின் முதல் தமிழ் எதிர்க்கட்சி தலைவரும் தமிழர் விடுதலை கூட்டணியின் ஸ்தாபகத் தலைவருமான அ. அமிர்தலிங்கம் அவர்களின் 30வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ- TELO) அஞ்சலி செலுத்தி நினைவு கூர்ந்தது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் அன்னாரின் திருவுருவச் சிலையடியில் நேற்று (13) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செய­லா­ளர் நாயகமும் சிரேஸ்ட சட்­டத்­த­ரணியுமான என்.சிறி­காந்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினருமான விந்தன் கனகரட்னம், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணிச் செயலாளருமான சபா குகதாஸ் உட்பட ரெலோவின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.