Hot News
Home » செய்திகள் » புத்தரின் காவியில் பட்ட கறுப்புக்கரை-ரெலோ மதுசுதன்

புத்தரின் காவியில் பட்ட கறுப்புக்கரை-ரெலோ மதுசுதன்

கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் இடம்பெற்ற ஒரு வெறுக்கத்தக்க செயல் ஆனது ஒரு மனித வர்க்கத்திற்கு ஒவ்வாத செயல் அரங்கேறி இருப்பது கண்டு தமிழர்களாகிய நாம் மட்டுமல்ல இலங்கையர்கள் என்று சொல்லுகின்ற அத்தனை பேரும் வெட்கித் தலை குனிய வேண்டிய கால கட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.

இன்று 2020ஆம் ஆண்டை நெருங்கும் இத்தகை நவீனத்துவத்திலிருந்து கொண்டு இவ்வாறான கீழ்த்தரமான ஒரு மனிதப் பண்பு இல்லாத செயல்களை இந்த மானிடப்பண்பற்ற பேரினவாதிகள் அங்கு மேற்கொண்டிருக்கிறார்கள் என்றால் இந்த நாடு ஆசியாவின் அதிசயம் ஆகாது அதற்கு வேறு விதமான அதிசயங்களை நிகழ்த்த கூடும் என்பதற்கு ஒரு உதாரணத்தை காண்பித்திருக்கிறது.

கன்னியா வெந்நீர் ஊற்று இருக்கிற விநாயகர் ஆலயத்தினை தகர்த்துவிட்டு, பாரம்பரியமாக பிள்ளையார் குடியேறி அந்த இடத்தின் சைவப் பெருமையை பறைசாற்றுகிறார்.அத்தகைய சைவசமய விழுமியங்களை வழித்துத் துடைத்து விட்டு அதனை ஒரு பேரினவாத ஆக்கிரமிப்பு வலயமாக மாற்றுவதற்கான திட்டமிட்ட சிங்கள பகுதியாக சிங்காரிப்பது இன்றும் பேரினவாதம் செயற்படுவதை கண்டிக்கிறோம்.
இவ்வாறான வலுகட்டாய ஆக்கிரமிப்புக்கெதிராக சைவம் தழைத்தோங்கிய ஒரு மாவட்டம், சைவ விழுமியங்கள் மேம்பட்ட ஒரு பகுதி, ராவணேஸ்வரன் ஆண்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு பகுதி ,இதிகாசங்களில் பாடல்கள் பாடப்பெற்ற தலத்தை அமைத்துக் கொண்ட பகுதி, தேவாரப் பாடல்களில் வந்த “இராவணன் மேலது நீறு” என்ற வகையில் இராவணேசுவரன் ஆண்ட அவனால் தோண்டப்பட்ட வெந்நீரூற்று அமைந்த பகுதி இதிலே புத்தரை எப்போது பலாத்காரமாக வ குடியேற்றலாம் என்று பேரினவாதம் எதிர்பார்த்திருக்கிறது.

பாரம்பரியமாக ஒரு இனம் வாழ்ந்து வந்த ஒரு பிரதேசத்தை ஆக்கிரமித்து ஒரு மெல்ல மெல்ல புற்றுநோய் போல் ஆக்கிரமித்து அதை ஒரு ஆக்கிரமிப்பு பிரதேசமாக மாற்ற இந்த கைங்கரியத்தை கச்சிதமாக மேற்கொள்ளமுடிகிறது பேரினவாத தரப்பினால்.

ஒரு நாட்டினுடைய பெருமை என்பது அதனுடைய வரலாற்று படிமங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. ஒரு நாட்டினுடைய சிறப்பு என்பது அதனுடைய தொன்மையும், பழமையும், வரலாற்று சிறப்பும் அதனால் அது நிமிர்ந்து நிற்கும் .ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் இங்கு பூர்வீகமாக இருந்தவர்கள், இங்கு ஐயாயிரம் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர், பாரம்பரியமாக வாழ்ந்தவர்கள் என அத்தகைய பூர்வீக மக்கள் அவர்களது விழுமியங்களினை, அடையாளங்களை அழித்து விட்டு அவர்களது அடையாளங்களை குழி தோண்டி புதைத்துவிட்டு இன்று பேரினவாதம் தனது மதத்தை பிரதிஷ்டை பண்ணுவதற்கு தயாராகிறது.

அந்தவகையில் கண்ணியாவில் இடம்பெற்ற அந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை வழிமறித்து, எத்தனையோ இடர்பாடுகளை ஏற்படுத்திய போதிலும் அந்த இடத்தை பார்வையிட சென்ற தென்கயிலை ஆதீனக் குரு முதல்வர் மீது கோப்பி தண்ணீரினால் ஊற்றி அவமானப்படுத்தியமையானது தென்கயிலை ஆதீன குருக்கள் மீது பட்ட எச்சி கோப்பி அல்ல! அது எந்த சைவ மதத்திலிருந்து துறவரம் மேற்கொண்ட புத்த பகவானின் காவியுடையில் தெளிக்கப்பட்ட கரை படிந்த நீர் ஆகும்!!!!
என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் .

இலங்கை இன்னமும் 83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் இருந்து பாடம் படிக்காத சிங்களத் தரப்பாக இன்னமும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது.

இந்த நாட்டின் கரை படிந்த பக்கங்களால் எழுதப்பட்ட 83 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்துக்குப் பிறகு அந்தக் கலவரத்தை தோற்றுவித்த சிங்களக் காடையர்களின் விந்தணுக்களில் பிறந்த இன்றைய தலைமுறையினர் இன்றும் அதே ஈனச் செயலை செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலாக இருக்கிறது.

இவ்வாறான ஈனத்தனமான குரு முதல்வர்கள் மீது அல்லது ஒரு சமயத் தலைவர்கள் மீது விஷமத்தனமாக காட்டுத்தனமாக நடந்து கொண்டிருப்பது பௌத்த சமயத்திற்கு ஏற்படுத்திக்கொண்ட இழுக்காகும், புத்த பகவான் மீது விசிறப்பட்ட கறையாகும் என்பதை அனைத்து புனிதமிக்க பெளத்தர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த நாடு அகல பாதாளத்தில் இருந்து மீண்டும் கட்டியெழுப்ப படுவதற்கு ஒரு உன்னதமான சேவைகளை முன்னெடுக்காமல் மீண்டும் மீண்டும் அதே கலவரங்களை உருவாக்கியவர்களின் பிறப்புரிமை இயல்புகளை, காடைத்தனங்கள் காட்டுவதென்பது இந்த நாடு மீண்டும் பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்த உலகத்தின் முன் மேலுயர்த்தி காட்டி நிற்கிறது.

ஒரு பௌத்த பிக்கு மீது ஒரு தமிழன் அல்லது சைவன் இவ்வாறு மேற்கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அனைத்து மக்களும் அறிவார்கள். ஆனால் இன்று தென்கயிலை ஆதீன சுவாமி மீது அந்த எச்சில் கோப்பி ஊற்றப் பட்ட பின்னரும் அனைத்துத் தரப்பும் அமைதியாக இருக்கிறது என்றால் தமிழர்கள் சமாதானத்தை விரும்புகிறார்கள், சைவர்கள் சமாதான போக்கையும், அன்பையும் அவர்களுடைய சைவம் போதிக்கின்ற அந்த அன்பின் நிமித்தம் அவர்கள் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் அமைதியின் வடிவான ,ஒரு சமாதானத்தின் வடிவாக ,ஞானத்தின் வடிவாக இருக்கின்ற விளங்குகின்ற அந்த புத்த பகவானை பின்பற்றுகிற அவருடைய போதனைகளை பின்பற்றுகிற இந்தப் பெளத்த புதல்வர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதில் எங்கள் தமிழ் தரப்பு மிகவும் ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

மதுசுதன்.கு
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ( ரெலோ) மத்திய குழு உறுப்பினர்
18.07.2019

Author: TELO Admin