Hot News
Home » செய்திகள் » கெளதாரி முனை மணல் அகழ்வால் உவர் நீராக மாறும் நன்நீர்

கெளதாரி முனை மணல் அகழ்வால் உவர் நீராக மாறும் நன்நீர்

கிளிநொச்சி பூநகரி கெளதாரி முனையில் இடம்பெறும் மணல் அகழ்வை தடுத்து நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண் அகழ்வு இடம்பெறுவதனால் நன்நீர் உவர் நீராக மாற்றமடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கும் மக்கள், மணல் அகழ்வை தடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கெளதாரி முனையில் இடம்பெறும் மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பிரதேச மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மணல் ஏற்ற வந்த டிப்பர் வாகனங்களை மணல் ஏற்ற விடாது வீதியை மறித்து பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எமது மண் வளத்தை சுரண்டாதே,போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட இடத்திற்கு சென்ற பூநகரி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுடன் கலந்துரையாடி மணல் விடயம் பிரதேச செயலாளருடன் சம்மந்தப்பட்டது எனவும் மணல் அகழ்வு தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளரிடம் சென்று பிரச்சனையை முன் வைக்குமாறு கூறினார்.

இதனையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர்.