Hot News
Home » செய்திகள் » மகிந்த அணியினரின் அமெரிக்க எதிர்ப்பு பொய்யானது

மகிந்த அணியினரின் அமெரிக்க எதிர்ப்பு பொய்யானது

சிலர் பொய்யான அமெரிக்க எதிர்ப்பை உருவகித்து காட்ட முயற்சித்து வருவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

நாட்டில் தற்போது அமெரிக்க எதிர்ப்பை காண முடிகின்றது. அதேபோல் ஏகாதிபத்திய எதிர்ப்பை கேட்க முடிகின்றது. இவ்வாறு பல எதிர்ப்புகளை கேட்க முடிகிறது.

செயற்பாட்டு ரீதியாக இருங்கள் என்று சிங்கப்பூர் எமக்கு கூறியுள்ளது. எந்த கொள்கையின் அடிப்படையாக இருந்தாலும் அது தனியார் நிறுவனமா அல்லது அரச நிறுவனமா என்பது அல்லாமல் அது முன்னேறுகிறதா என்பதை அடிப்படையாக கொண்டு செயற்படுங்கள்.

ஒவ்வொரு கொள்கைகளுக்கும் அடிமையாக இருக்காமல் செயற்பாட்டு ரீதியானவர்களாக இருங்கள் என்று சிங்கப்பூர் ஸ்தாபகர் லீ.குவான் யூ. தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.