Hot News
Home » செய்திகள் » ரெலோ தலைவர் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் இடையே மன்னாரில் விசேட சந்திப்பு

ரெலோ தலைவர் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் இடையே மன்னாரில் விசேட சந்திப்பு

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் மன்னார் ரெலோ அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த ஒன்று கூடலில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும் மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ரி. மோகன்ராஜ் , துணை அமைப்பாளர் வினோ, மன்னார் நகர முதல்வர் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபை உபதவிசாளர் லூர்து நாயகம், மன்னார் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிறேம் குமார் உட்பட மன்னார் நகரசபை , மன்னார், மாந்தை, நானாட்டான், முசலி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச இளைஞரணி செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட அபேட்சகர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

இதன் போது கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் தற்போதைய செயற்பாடுகள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பல்வேறுபட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் நடைபெறும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பான மீளாய்வு செய்யப்பட்டதோடு, எதிர்கால செயற்பாடுகள் அரசியல் நகர்வுகள் பற்றிய ஆலோசனைகளும் திட்டமிடலும் இடம்பெற்றது.

இதன் போது சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. மேலும் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களின் அபிவிருத்தி தேவைகளை ஆராய்ந்து சீரான அபிவிருத்தி வேலையை முன்னெடுக்க மாவட்ட அமைப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் 11 பேர்கள் கொண்ட திட்டமிடல் அபிவிருத்தி குழு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.