Hot News
Home » செய்திகள் » மலையகத்துக்கும் இந்தியாவுக்குமான உறவுப்பாலம் மேலும் வலுவடைய வேண்டும்

மலையகத்துக்கும் இந்தியாவுக்குமான உறவுப்பாலம் மேலும் வலுவடைய வேண்டும்

கடந்த காலங்களை விட மலையகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கம்  அதிகரித்து வருகின்றது. இந்த உறவும் பாலம் மேலும் வலுவடைய வேண்டுமெனவும்  சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் மலையக தேசிய முன்னணி  பொதுச் செயலாளரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்டப்  பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் இந்திய சுதந்திர தினத்தை  முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் தமது செய்தியில்,

இந்தியா சுதந்திரம் அடைந்து 72ஆண்டுகளில் எவ்வளவோ தடைகளைக் கடந்து இன்று  உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழ்கின்றது. இந்தியா வல்லரசாக வேண்டும் என  அமரர் அப்துல் கலாம் கனவு காணச் சொன்னார். அதை நனவாக்கும் வகையில் தகவல்  தொழில் நுட்பத்தில் பாரிய வளர்ச்சியைக் கண்டு வருகின்றது.

 மலையக  தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்ற  அடிப்படையில் எமது மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்க வேண்டிய பாரிய  பொறுப்பு இந்திய அரசாங்கத்துக்கு இருக்கின்றது அதை உணர்ந்து இலங்கை வாழ்  இந்திய வம்சாவளி மக்களுக்கு வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், கலாசாரம் போன்ற  பல்வேறு துறைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகின்றது. அதற்கு எமது மலையக  மக்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதோடு எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான  உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்று சுதந்திர தின வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.