Hot News
Home » செய்திகள் » காலாவதியான அவசரகாலச் சட்டத்தைப் பதிலீடு செய்ய புதிய வர்த்தமானி அறிவிப்பு

காலாவதியான அவசரகாலச் சட்டத்தைப் பதிலீடு செய்ய புதிய வர்த்தமானி அறிவிப்பு

அவசரகால சட்டம் காலாவதியான நிலையில், முப்படையினருக்குமான தேசிய பாதுகாப்பு அதிகாரத்தை வழங்கும் விதமாக புதிய வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 22ஆம் திகதியிடப்பட்டு வெளியிட்ட வர்த்தமானி நேற்று 923) வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு 25 நிர்வாக மாவட்டங்களை பாதுகாக்கும் பொறுப்பு முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் காலாவதியான நிலையில் இந்த அதிகாரம் முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.