Hot News
Home » தற்போதைய செய்திகள் » யாழ் பல்கலை கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்துக்கு `ரெலோ` முழு ஆதரவு

யாழ் பல்கலை கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்துக்கு `ரெலோ` முழு ஆதரவு

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டோர் நேற்று (12) ஆரம்பித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தனது முழு ஆதரவினை தெரிவிப்பதாகக் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப் பட்டியலில் வேலை வாய்ப்பிற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பெயர்களை பதிவு செய்து தங்களது பெயர்கள் வராது பாதிக்கப்பட்டோர், தங்களது கோரிக்கைகளை உயர் கல்வி அமைச்சோ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, யாழ் பல்கலைக்கழக நிர்வாகமோ, ஏற்று உரிய தீர்வகளை வழங்க முன்வர வேண்டுமெனக் கோரி நேற்று முதல் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.