Hot News
Home » செய்திகள் » சஜித்தை பின்னால் இருந்து அமெரிக்கா இயக்குவதாக வாசு தெரிவிப்பு

சஜித்தை பின்னால் இருந்து அமெரிக்கா இயக்குவதாக வாசு தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் என்பன குறித்து கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ள நிலையில் அந்த அறிவிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று சித்தசுயாதீனமற்றவர்களைப் போல கதைகூறித் திரிந்துகொண்டிருக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்திற்குப் பின்னால் அமெரிக்காவின் ஆலோசனைகள் அமுல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

கோத்தபாய ராஜபக்சவின் பேச்சினால் மங்கள சமரவீர மிகுந்த பொறாமை கொண்டுள்ளார். அவர் அவசரமாக கோத்தபாய ராஜபக்சவின் கருத்துக்கு பதில் கருத்தையும் வெளியிட்டிருந்தார்.

தேசிய பாதுகாப்பு உறுதிப்பாடு மற்றும் ஒழுக்க விழுமியங்கள் அறிமுகப்படுத்தல், பொருளாதாரத் திட்டம் போன்றன குறித்து கோத்தபாய வெளியிட்ட கருத்துக்கு பதில் கருத்தை வெளியிட்டிருந்த மங்கள சமரவீர, சொன்னதுபோல செய்துக்காட்ட முடியுமா?

அரசாங்கத்தை அமைத்து அரச கொள்கையை அமைக்கும் செயற்பாடு இதனூடாகவே இடம்பெறும் என்பதை அவருக்கு கூற விரும்புகின்றேன்.

அதனையே கோத்தபாய கூறியிருக்கின்றார். தற்போது மங்கள சமரவீர ஒரு சித்தசுயாதீனமற்ற நபரைப்போல கதைகூறித்திரிகின்றார்.

அதற்கு காரணம் வேறொன்றுமல்ல, அப்படிப்பட்ட கருத்து வெளியிட்டபோது, அதற்கு பதிலளிப்பதற்கான திறன் மங்கள சமரவீரவினால் முன்நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளருக்கு இல்லை.

தனது அரசியல் வாழ்வினை கொண்டாடும் வகையில் அமைச்சர் மங்கள சமரவீரவினால் அண்மையில் நடத்தப்பட்ட நிகழ்வில் சமந்தா பவர் கலந்துகொண்டிருந்தார்.

அமெரிக்கப் பிரபல இராஜாங்க செயலாளர் அலுவலகத்துடன் மங்கள சமரவீர நெருக்கமான தொடர்பினை கொண்டுள்ளார்.

அதற்கமைய மங்கள சமரவீரவின் தந்தையான ஹேமானமவின் புதல்வன் என்ற எழுதிய நூல் வெளியிட்டு வைக்கப்படட போதிலும் ஹேமானம புதல்வன் என்பதற்குப் பதிலாக விழாவில், சமந்தா பவரின் புதல்வன் என்றே கூறவேண்டும்.

இன்று சஜித் பிரேமதாசவை முன்நிறுத்தி வெற்றிபெற வைப்பதற்கு முயற்சிக்கின்ற மங்கள சமரவீரவின் முயற்சிக்குப் பின்னால் இருப்பது என்ன என்று தெரிகிறது.

அதற்கமைய சமந்தாவின் புதல்வருக்கு அமெரிக்க இராஜாங்க செயலகம் ஆலோசனை வழங்கியிருக்கும் என்பதை அனுமாணிக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.