Hot News
Home » செய்திகள் » பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தாவிடின் பாகிஸ்தான் துண்டுகளாக சிதறும்

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தாவிடின் பாகிஸ்தான் துண்டுகளாக சிதறும்

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனின் அந்நாடு தானாகவே துண்டுகளாக சிதறுமென இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ராஜ்நாத் சிங் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இங்கு பேசுகையில்;

“பாகிஸ்தானியர் யாரும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் செல்ல வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஏனெனில், பாகிஸ்தான் மக்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்தால், இந்திய இராணுவ வீரர்கள் அவர்களை திரும்பி வர அனுமதிக்க மாட்டார்கள் என எச்சரித்துள்ளார்.

சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியாவில் சிறுபான்மையினரின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது.

இதற்கு காரணம், சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தார்கள், பாதுகாப்புடன் இருந்து வருகின்றனர், இனியும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதனாலேயே ஆகும்.

இந்தியாவில் ஜாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.