Hot News
Home » செய்திகள் » ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 15இல் நடைபெற வாய்ப்பு

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 15இல் நடைபெற வாய்ப்பு

ஜனாதிபதித் தேர்தல் பெரும்பாலும் நவம்பர் 15ஆம் திகதி நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு எதிர்வு கூறியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழு நேற்று (17) அழைத்திருந்தது.

இதன் போது, ஜனாதிபதித் தேர்தல் பெரும்பாலும் நவம்பர் 15ஆம் திகதி நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அடுத்த வாரத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழு அறிவித்ததாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டார்.