Hot News
Home » செய்திகள் » ஜனாதிபதி கோட்டாபயவின் முதலாவது வௌிநாட்டு பயணம் இந்தியாவிற்கு

ஜனாதிபதி கோட்டாபயவின் முதலாவது வௌிநாட்டு பயணம் இந்தியாவிற்கு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்கவே அவர் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

அந்த உத்தியோகப்பூர்வ அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று ஜனாதிபதியை சந்தித்தார்.

இதன்போது எதிர்வரும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் விடுத்த அழைப்பை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த தகவலை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொள்ள போகும் முதலாவது வெளிநாட்டு விஜயம் என்பது குறிப்பிடதக்கது.