Hot News
Home » தற்போதைய செய்திகள் » ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர் அருளர் அவர்களுக்கு எங்கள் செவ்வணக்கம்

ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர் அருளர் அவர்களுக்கு எங்கள் செவ்வணக்கம்

தமிழீழ விடுதலைக்காக போராட சென்ற ஈழ விடுதலை அமைப்புக்களில் ஒன்றான ஈரோஸ் அமைப்பின் ,மூத்த போராளியும் ஈரோஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், “லங்கா ராணி” நூலின் ஆசிரியரும் உலகப் புகழ்பெற்ற மேற்குலகப் பாடகியும் இனஉணர்வாளருமான மாயா என அன்போடு அழைக்கப்படும் மாதங்கி அருட்பிரகாசத்தின் அன்புத் தந்தையுமான போராளி அருளர் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

ஈழ விடுதலைப் போராட்ட ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்…
ஈழ புரட்சி அமைப்பின்
ஸ்தாபகர்களில் ஒருவர்…

தோழர் அருளர் அவர்களுக்கு எங்கள் செவ்வணக்கம்.

குறிப்பாக உலக அரங்கில் தமிழர்களின் இனவலியை தனது தனித்துவமான கலைத்திறன் ஊடக விட்டு கொடுப்பின்றி விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் எடுத்தியம்பி வரும் அன்பு சகோதரி மாயாவிற்கு எம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

Author: TELO Admin