Hot News
Home » செய்திகள் » கனடா , பங்களாதேஷ் , நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்கள் பிரதமருடன் சந்திப்பு

கனடா , பங்களாதேஷ் , நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்கள் பிரதமருடன் சந்திப்பு

கனடா , பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து நாட்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். இந்த சந்திப்புக்களில் அரசியல், கல்வி, முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருதரப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின் இன்று பிரதமரை சந்திருந்தார்.

இதே போன்று பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ரியாஸ் அமீதுல்லா பிரதமரை சந்தித்து வர்த்தகம் , பரஸ்பர பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிதோடு, பிரதமரை பங்களாதேஷ் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு அழைத்து கடிதத்தையும் கையளித்தார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோனா கெம்ப்க்கர்ஸ் சந்தித்த போது , கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். அத்தோடு பொருளாதார விடயங்களில் நியூசிலாந்து தொடர்ந்தும் இலங்கைக்கு உதவும் என்றும் கூறினார்.