Hot News
Home » தற்போதைய செய்திகள் » இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த நியூசிலாந்து, UAE பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு அழைப்பு!

இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த நியூசிலாந்து, UAE பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு அழைப்பு!

ஐக்கிய அரபு அமீரக தூதுவர் அலி அல் மௌலா மற்றும் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் ஜோனா கெம்ப்கர்ஸ் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இதன்போது ஜனாதிபதியின் செயற்திட்டத்தை பாராட்டிய ஐக்கிய அரபு அமீரக தூதுவர், அதை செயற்படுத்துவதற்கு உதவியை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது நாட்டின் உறுதிப்பாட்டையும் அவர் இதன்போது எடுத்துரைத்தார்.

இதேவேளை நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கெம்ப்கர்ஸ் தலைமையிலான தூதுக்குழு இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நன்மைகளை வலுப்படுத்துவதற்கான தங்கள் நாட்டின் உறுதிப்பாட்டையும் விளக்கியிருந்தார்.