Hot News
Home » செய்திகள் » பல்கலைக்கழகங்களுக்கு 83 ஆயிரம் மாணவர்களை உள்வாங்க தீர்மானம்

பல்கலைக்கழகங்களுக்கு 83 ஆயிரம் மாணவர்களை உள்வாங்க தீர்மானம்

2020ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தகவல் தொடர்பாடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.