Hot News
Home » செய்திகள் » சீனாவிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்!

சீனாவிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்!

சீனாவிடமிருந்து வை.12 ரக விமானங்கள்  இரண்டினை அரசாங்கம் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானங்களை 6 மில்லியன் டொலர்கள் செலவில் இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை அண்மையில் ஹப்புத்தளை பகுதியில் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளான விமானம் கடந்த 30 வருடம் பழைமையான வை.12 ரக விமானம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானம் சீனாவின் ஹெபின் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையிலேயே சீனாவிடமிருந்து வை.12 ரக விமானங்களை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.