Hot News
Home » செய்திகள் » 2025க்கு பின்னர் எந்ததொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லையென ரணில் தெரிவிப்பு

2025க்கு பின்னர் எந்ததொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லையென ரணில் தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 2025 க்கு பின்னர் எந்ததொரு தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என கூறியுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தற்போதைய சூழ்நிலையில் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டின் பின்னர் கருத்தில் கொள்ளுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.