Hot News
Home » செய்திகள் » குப்பைக்கிடங்கிற்கு அருகில் காடழித்து மக்களை குடியேற்றியது ரிசாட் தான்:ரெலோ தலைவர் செல்வம் எம்.பி!

குப்பைக்கிடங்கிற்கு அருகில் காடழித்து மக்களை குடியேற்றியது ரிசாட் தான்:ரெலோ தலைவர் செல்வம் எம்.பி!

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் தவிசாளரை தரக்குறைவாக பேசிய ரிசாட் தான் செய்த மடமைத்தனமான செயற்பாடுகள் தொடர்பில் உணர்ந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இன்று வவுனியாவில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமான செயற்பாடுகளை அமைச்சர் ரிசாட் தனது ஆதரவாளர்களை வைத்து செயற்படுத்தி வருகின்றார். அதன் ஓர் அங்கமே பம்பைமடு குப்பைக்கிடங்கு விவகாரமும் ஆகும்.

பல ஆண்டுகளாக வவுனியா நகர மற்றும் கிராமங்களின் குப்பைகள் பம்பைமடு கிராமத்திலேயே கொட்டப்பட்டு வருகின்றது. இவ்விடயம் ரிசாட் பதியுர்தீனுக்கு தெரிந்திருந்தும் அப்பாவி முஸ்லீம் மக்களை தனது அரசியல் நலனுக்காக குப்பை கிடங்களையும் பொருட்படுத்தாமல் அதற்கு அருகில் சாளம்பைக்குளத்தில் வனவளத்திணைக்களத்தின் காடுகளை அழித்து குடியேற்றியிருந்தார்.

இந் நிலையில் தற்போது தனது தவறை மறைப்பதற்காக அம் மக்களை ஏவி இதுவரை காலமும் குப்பை கொட்டப்பட்டு வந்த இடத்தினை மாற்ற வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் செய்ய தூண்டியுள்ளார்.

ரிசாட் அமைச்சராகவும் அபிவிருத்திகுழு தலைவராகவும் இருந்தபோது குப்பை கிடங்கு விவகாரத்திற்கு தீர்வாக சிறந்த முறையில் அதனை அமைப்பதற்கு 200 மில்லியனை பெற்று தருவதாக கூறிய போதிலும் அதனை பெற்றுக்கொடுக்காதது அவரது தவறே தவிர வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவரின் தவறல்ல.

இன்று ஒரு மாற்றுத் தீர்வில்லாத நிலையில் குறித்த குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என கூறுவது மக்களை பாதிக்கும். இதனை வெளிப்படையாக தெரிவிக்கும் பிரதேச சபை தவிசாளரை தரக்குறைவான வார்த்தைகளால் பாராளுமன்றத்தில் கூறுவதனால் தனது தவறை ரிசாட் மறைத்து விடயமுடியாது.

எனவே தவிசாளர் சரியான தீர்மானத்தினை மக்கள் நலன் சார்ந்து எடுக்கும் போது தனது அரசியல் தேவைக்காக அவர் இயங்கவில்லை என ரிசாட் எண்ணுவது மடமைத்தனமானது. பிரதேச சபை தலைவரின் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கு நாம் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Author: TELO Admin