Hot News
Home » செய்திகள் » ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு பொதுத் தேர்தலிலும் கட்டாயம் அவசியம்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு பொதுத் தேர்தலிலும் கட்டாயம் அவசியம்…

ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பின் இறுதி அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் இரா.சம்பந்தனிடம் கையளித்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு மிகவும் அவசியம் என்று கூட்டமைப்பின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.