Hot News
Home » தற்போதைய செய்திகள் » முல்லையில், ரெலோவின் மாவட்ட பணிமனை திறப்பு

முல்லையில், ரெலோவின் மாவட்ட பணிமனை திறப்பு

முல்லைத்தீவில் – தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பினுடைய மாவட்ட பணிமனை 15.02.2020 இன்றைய நாள் திறந்துவைக்கப்பட்டது.

முல்லைத்தீவு – உணாப்பிலவுப் பகுதியில் அமைந்துள்ள குறித்த மாவட்டப் பணிமனையினை, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநான் திறந்துவைத்தார்.

குறிப்பாக இந் நிகழ்வில் விருந்தினர் வரவேற்பு, மங்கல விளக்கேற்றல், கொடியேறல் என்பவற்றைத் தொடர்ந்து குறித்த மாவட்டப் பணிமனை திறந்துவைக்கப்பட்டது.

கெளரவ விருந்தினராக முல்லைமாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற கெளரவ உறுப்பினர் திரு வினோஅவர்களும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு ரவிகரன் அவர்களும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு மயூரன் அவர்களும் மற்றும் கரைதுறைப்பற்றுபிரதேசசபையின் தவிசாளர் திரு தவராசா அவர்களும் கரைதுறைப்பற்று பிரதேசசபையின் கெளரவ உறுப்பினர்களான திரு விஜிந்தன் திரு ரகு திரு ரவி திரு லோகேஸ் திரு தொம்மைப்பிள்ளை திரு கவாஸ்கர் திரு கஜன் பாண்டியன்குள பிரதேசசபையின் கெளரவ பிரதேசசபை உறுப்பினர் திரு செந்தூரன் அவர்களும் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிப்பொருளாளர் திரு பீற்றர்இளஞ்செழியன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டதோடு இந்த நிகழ்வு ரெலொவின் மத்தியகுழு உறுப்பினரான திரு க. கணேசகுமாரன் தயா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பிடத்தக்கது.

Author: TELO Admin