Hot News
Home » தற்போதைய செய்திகள் » கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மில்லியனை எட்டியது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மில்லியனை எட்டியது

உலகில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மில்லியனை எட்டியுள்ளது. அத்துடன், குறித்த தொற்றுக்குள்ளாகி 53,000 க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்றானது அமெரிக்காவில் வேகமாக பரவி வருவதுடன், அங்கு தினசரி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், கனடாவிலும் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதுடன் அங்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.