Hot News
Home » செய்திகள் » போலியான தகவல்களை முகநூல் மூலம் பரப்பும் நானாட்டான் பிரதேசசபை உறுப்பினருக்கான பதில் -டெலோ தலைவர் செல்வம்

போலியான தகவல்களை முகநூல் மூலம் பரப்பும் நானாட்டான் பிரதேசசபை உறுப்பினருக்கான பதில் -டெலோ தலைவர் செல்வம்

நானாட்டான் பிரதேசசபை உறுப்பினராக இருக்கும் G.M.சீலன் என்பவர் தனது முகநூல் மூலம் உண்மைக்கு புறம்பான போலியான தகவல்களை வீடியோ காட்சி மூலம் பரப்பிவருகின்றார். நானாட்டான் பிரதேசத்தில் சதொசவிற்பனை நிலையம் தற்போதைய காபாந்து அரசின் அமைச்சர் கௌரவ.டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் திறந்துவைக்கப்பட்டள்ளது. அதற்கு எனது நன்றிகளை தெரிவிப்பதோடு மேற்படி சதொச விற்பனை நிலையம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இருந்த காலத்தில் வரவில்லை. தற்போதுள்ள நெருக்கடியான காலத்தில் திறந்துவைக்கப்பட்டதையிட்டு அமைச்சர் கௌரவ.டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீண்டும் எனது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துகொள்கின்றேன். புதிதாக அமைந்த அரசின் அமைச்சரால் திட்டம் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.

ஆனால் மேற்குறிப்பிட்ட பிதேசசபை உறுப்பினர் தனது வீடியோ காட்சியில் சதோசா விற்பனை நிலையம் நானாட்டானுக்கு வருவதை நான் தடைசெய்ததாகவும், கடும் அழுத்தம் பிரயோகித்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்வசம் உள்ளதாகவும் வெளியிடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அவரிடம் உள்ள ஆதாரங்களை ஊடகங்கள் முன்னிலையில் காட்ட அவர் தயாரா? அவருக்கு சவாலாக கேட்டுக்கொள்கின்றேன்.
மேற்படி பிரதேசசபை உறுப்பினர் திட்டமிட்டு போலியான தகவல்களை தனது முகநூல் மூலம் பரப்பி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் என்னை தேற்கடிக்கவேண்டும் என்றும், தமிழ்தேசியத்திற்கு எதிராக செயற்படும் ஒரு குழுவினால் வழிநடாத்தபடுகின்றார்.

அவர் வீடியோ காட்சியில் குறிப்பி்ட்ட குற்றசாட்டுக்கான ஆதாரங்களை ஏழு நாட்களுக்குள் வெளியிடவேண்டும். வெளியிடாத பட்சத்தில் அப்பிரதேசசபை உறுப்பினரான G.M.சீலன் என்பவருக்கெதிராக பொலிஸ் நிலையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன்போது கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அ.அடைக்கலநாதன்
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
முன்னாள் பா.உ

Author: TELO Admin