Hot News
Home » செய்திகள் » கேப்பாபுலவு முகாமில் மேலும் கடற்படையினர் அறுவருக்கு கொரோனா

கேப்பாபுலவு முகாமில் மேலும் கடற்படையினர் அறுவருக்கு கொரோனா

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த கடற்படையினரில் மேலும் அறுவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் (22) அவர்கள், சிகிச்சைக்காக வெலிகந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி விமானப் படைத்தளத்தில், நேற்று இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஏனைய கடற்படை வீரர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே, மேலும் அறுவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.