Hot News
Home » செய்திகள் » அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

அரிசி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பாவிற்கான அதிகபட்ச சில்லரை விலை 120 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை 98 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வௌ்ளை பச்சையரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையாக 96 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சையரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை 93 ரூபாவாகும்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

Author: TELO Admin