Hot News
Home » செய்திகள் » நல்லூர் பிரதேச சபையில் உறுப்பினர் மதுசுதனின் முன்மொழிவில் நவீன நகரமயமாக்கல் செயற்திட்டம்

நல்லூர் பிரதேச சபையில் உறுப்பினர் மதுசுதனின் முன்மொழிவில் நவீன நகரமயமாக்கல் செயற்திட்டம்

SMART VILLAGE என்னும் தொனிப்பொருளில் நல்லூர் பிரதேசத்தினை நவீனமாகவும் மற்றும் நகரமயமாக்கல் ,அழகுபடுத்தல் போன்றவற்றினால் ஒரு சிறந்த நகராக கட்டியெழுப்பும் நோக்கில் 2018 நல்லூர் பிரதேச சபையின் அமர்வில் SMART VILLAGE எனும் தொனிப்பொருளில் உறுப்பினர் மதுசுதன்  அவர்களினால் பிரேரணை சமர்பித்து அங்கீகாரம் பெற்று நிறைவேற்றப்பட்டிருந்தது, ஒரு சிறந்த மாதிரி நகரம்/கிராமத்தினை கட்டியமைக்கும் நோக்கில் அதனை மக்கள் , மாணவர்கள் அதிகம் நடமாடும்/பாவிக்கும் இடமாக கருத்தக்கூடிய பல்கலைகழக கல்லூரி ,தொழில்நுட்பகல்லூரி வீதிகளை இவ்வாறான திட்டத்திற்காக தெரிந்தெடுத்தும் சபையில் முன்மொழியப்பட்டிருந்தது.
எனினும் போதிய நிதி இன்மையினால் தள்ளி போய்கொண்டிருந்த   கனவு இப்போது கண்முன்னே நிறைவேறி வருவது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.இந்த பாரிய அழகாக்கல் திட்டத்திற்காக நல்லூர் பிரதேச சபையின் வீதியான கருவப்புலம் வீதியில் சபை வரைக்குமான வீதி,மற்றும் தொழில்னுட்ப கல்லூரி_பல்கலைகழக கல்லூரி வீதிகளில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.சிறந்த ‘நடைபாதைகள்,பூஞ்செடிகள், சீமெந்து இருக்கைகளுடன் அவை இன்னும் சில நாட்களில் ஜொலிக்க இருக்கின்றன.
பிரதேசம் வளர்ச்சியடைகிறது,இன்னும் வளர்ச்சியடைய பாடுபடுவோம் மக்களுக்கான சிறந்த சேவைகளினை முன்னெடுப்போம் என்று வெளிப்படையாக உறுதி கூறுகிறோம்.’என்று உறுப்பினர் மதுசுதன் தெரிவித்துள்ளார்.

dav