Hot News
Home » செய்திகள் » அம்பாறையில் ரெலோ மத்தியகுழு உறுப்பினர் மீது – முன்னாள் பா.உ ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல்

அம்பாறையில் ரெலோ மத்தியகுழு உறுப்பினர் மீது – முன்னாள் பா.உ ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல்

அம்பாறை பெரியநீவாவணை பகுதியில் வைத்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அம்பாறை மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் தெ.தேவகுமாரன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் ரௌடிக்குழுவாக இயங்கி, பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ரௌடிக்குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தியதுடன் அவரது கைதொலைபேசியையும் எடுத்து சென்றுள்ளார்கள்.

கசிப்பு வடித்ததை காட்டிக் கொடுத்ததாக கூறியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி காலை 10.45 மணியளவில், அவரது வீட்டுக்குள் நுழைந்த ரௌடிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.

பல்வேறு சமூக செயற்பாடுகளால் தெ.தேவகுமாரன் அந்த பகுதியில் நன்கு அறியப்பட்டவர். அண்மையில் அவரது வீட்டுக்கு அருகில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்தபோது, பொலிசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, அவரை தாக்கியவர்கள கைது செய்திருந்தனர்.

மேற்படி ரௌடி கும்பலை சேர்ந்தவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனின் ஆதரவாளர்கள் என்று பாதிக்கப்பட்ட தேவகுமாரன் தரப்பினரால் தெரிவிக்கப்படுகின்றது.

Author: TELO Admin