Hot News
Home » செய்திகள் » சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து தியாகி பொன் சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலை வளாகத்தில் இடம்பெற்றது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

தவிசாளரின் அஞ்சலிக் குறிப்பினைத் தொடர்ந்து தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,PLOTE-இன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் மலர்மாலைகளை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான பாலசுப்பிரமணியம் கஜதீபன்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் விந்தன் கனகரத்தினம், சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர் தர்ஷன், வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பிரதி பொறுப்பாளரும், யாழ்.மாநகர சபை பிரதி முதல்வர் து.ஈசன்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினரும், நல்லூர் பிரதேச சபை உப தவிசாளர் ஜெயகரன், வலிகாமம் கிழக்கு பிரதேச மன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பிரமுகர்கள், சனசமூக நிலையங்களின் தலைவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

சுகாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு உரைகள் இடம்பெறாது தவிர்க்கப்பட்டு சமூக இடைவெளி பேணப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன.

அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னிருந்து புலனாய்வாளர்களால் கடுமையாக குறித்த பிரதேசம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருந்தமையும் பின்னர் சம்பவ இடத்தில் விசேட அதிரடிப்படையினர் மோட்டார் சைக்கிள்களில் வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Author: TELO Admin