Hot News
Home » செய்திகள் » எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது – குருசாமி சுரேந்திரன்

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது – குருசாமி சுரேந்திரன்

எமக்குள் ஐக்கியம் இல்லாமையால் தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது குருசாமி சுரேந்திரன் ரெலோவின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

 நேற்று  (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ”எமது உரிமைகளை மறுக்கின்ற வகையில் தெற்கில் அரசியல் சூழ்நிலை மாற்றம் கண்டுள்ளது.

தெற்கில் இனவாதம் கக்கப்படுகின்றது தமிழர்கள் இந்த மண்ணின் பூர்வீக குடிகள் அல்ல வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கு சொந்த மானதல்ல என்று தெற்கில் இருக்கும் இனவாதிகள் குரல் கொடுக்கின்றார்கள். அதற்கு காரணம் நாங்கள் ஒற்றுமையாக இல்லாது திக்கு திசையாக சிதறி ஒவ்வொரு கட்சியாக பல கோணங்களில் இருப்பதே காரணமாகும்

இவ்வாறான சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும்   ஐக்கியமாக இருந்து தெற்கில் இருப்பவர்களுக்கு எமது பலத்தை காண்பிக்க அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள்” என்றார்.