Hot News
Home » தற்போதைய செய்திகள் » வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா

அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதி இல்லை எனவும் வெலிக்கடை சிறைச்சாலை கைதி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கந்தக்காட்டிலுள்ள போதைப்பொருளுக்கு அடிமையாகியவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலிருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவரே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட கைதி மற்றும் அவருடன் தொடர்புகளை பேணியவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்​டோரின் எண்ணிக்கை 2,078 ஆக உயர்வடைந்துள்ளது.