Hot News
Home » செய்திகள் » “அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” – சுரேந்திரன்

“அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி!” – சுரேந்திரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், வேட்பாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்கங்களுக்கு தெரிவித்திருந்த ஒரு கருத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் சுரேந்திரன் இவ்வாறு தெரிவி த்தார். அவர் மேலும் தெரிவிக்கையிலே,

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முக்கிய பிரமுகர் தன்னுடைய உரையினிலே தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மக்கள் அரசியல் தீர்வுக்காகவே ஆணையை வழங்கினார்கள் என்ற உண்மையை பகிரங்கமாக போட்டுடைத்ததுடன் உண்மையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதில் இருந்து அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக வைத்த கருத்துக்களிலிருந்து மாற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. அரசியல் தீர்வுக்காக இட்ட ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு செவ்வனே நிறைவேற்றி இருக்கிறது என்பது சகலரும் அறிந்த விடயம்.

எல்லாக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, வாக்கெடுப்பு என்ற நிலையிலே தயாராயிருக்கிறது. இது ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை தீர்க்காவிட்டாலும் பாரிய அளவிலே எம்முடைய அரசியல் நிலைப்பாட்டை ஒரு தளத்திலே கொண்டு வந்து நிறுத்துவதற்கு உதவும்.

இந்த உண்மையை எதிரணியினரே இன்று கூறிக் கொள்வதை தமிழ் மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்கிறது என்பதை இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கூட்டமைப்பு என்ன செய்தது, என்ன செய்தது என்று கேள்வி கேட்டவர்கள் இப்பொழுது அதற்கான பதிலையும் வழங்கி வைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author: TELO Admin